Love | துணையுடன் சேர்ந்து குளியுங்கள் : வாழ்வை மேம்படுத்துங்கள் !!
உங்கள் துணையுடன் இணைந்தே குளியுங்கள் : வாழ்வை மேம்படுத்துங்கள் !!
சரும மாற்றங்களை கண்டறியலாம் துணையுடன் சேர்ந்து குளிக்கும் போது, மற்றவரது சருமத்தில் / தோலில் ஏதேனும் அழற்சி போன்ற மாற்றங்கள் உண்டாகியிருக்கிறதா என கண்டறிய முடியும். பெரும்பாலும் நமது உடலின் பின் பகுதியில் என்ன மாற்றங்கள் நடக்கிறது என நாம் அறிந்துக் கொள்வதே இல்லை. அரிப்பு அதிகமாகும் போது மட்டுமே நாம் உணர்கிறோம்.
அழுத்தம் குறையும் உடல்நலம் பெருமளவு பாதிக்க காரணமாக இருப்பதே மன அழுத்தம் தான். உங்கள் துணையுடன் சேர்ந்து குளிக்கும் போது மன அழுத்தம் குறைகிறது.
சரும பிரச்சனைகள் குணமாகும் ஒருவருக்கு ஒருவர் உதவி குளிக்கும் போது, சருமம், தோலில் இருக்கும் அழுக்கு மற்றும் நச்சு அதிகமாக வெளியேற்றப் படுகிறது. இதனால், சரும அழற்சி, பருக்கள் போன்றவை அதிகம் ஏற்படாமல் தடுக்க முடியும்.
நம்பிக்கை அதிகரிக்கிறது தன்னம்பிக்கை குறைபாடு உங்கள் வளர்ச்சியை தடுக்கும் முட்டுக்கட்டை ஆகும். துணையுடன் ஒன்றாக குளிப்பதால், அழுத்தம் குறைந்து, காதல் அதிகரித்து தன்னம்பிக்கை வளர்கிறது.
இதய நலன் கடந்த சில வருடங்களாக இதய பாதிப்பு மக்களிடையே அதிகரித்து வருகிறது. துணையுடன் சேர்ந்து குளிக்கும் போது அழுத்தம் குறைவதால், இதய நலன் சிறப்பது மட்டுமின்றி மேலும் இதய துடிப்பும் சீராகிறது.
நரம்பு மண்டலம் குளிக்கும் போது உறவில் ஈடுபடுதல் நரப்பு மண்டலம் இலகுவாக உணர செய்கிறது. சுடுநீரில் குளிப்பதற்கு பதிலாக இதமான நீர் பயன்படுத்தினால் சருமத்திற்கும் நல்லது.
உடலுறவை மேம்படுத்தும் உங்கள் துணையுடன் ஒன்றாக குளிப்பதால், உடலுறவு மேம்படுகிறது. மேலும் உங்கள் இருவருக்குள் இருக்கும் காதல் அதிகரிக்கும். அன்யோன்யம் பெருகும்.
No comments