18+ | ஆசிரியை தொழிலுக்கு பொருத்தமற்ற பெண்கள்
எழுத்தறிவித்தவன் இறைவனாவான், என்றொரு முது மொழி எம் வழக்கில் உள்ளது. ஆனால் எழுத்தறிவித்த பாடசாலை ஆசிரியை ஒருவர் மாணவனை பள்ளியறைக்கு அழைத்துச் சென்ற சம்பவம் மிகவும் அருவருப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில் அந்த பெண் குருவாக இருக்கத்தகுதி அற்றவர் ஆகி விட்டார். இந்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
வயது குறைந்த மூன்று பாடசாலை மாணவர்களுடன் பாலியல் உறவு வைத்திருந்த 35 வயதான ஆசிரியை ஒருவர் தற்போது சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்டு பிணையில் சென்றிருந்த போதும் ஒரு மாணவனுடனான உறவைத் தொடர்ந்துள்ளார். இந்த சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகாத பாலியல் உறவைத் தொடர்ந்தார் எனும் குற்றச்சாட்டின் பெயரில் புதிய வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த ஆசிரியை பிணையில் செல்வதற்கும் 10 ஆயிரம் டொலர்கள் செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
இவருடைய குற்றம் தற்போது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் பிணை ஏதும் அற்ற முறையில் சிறையில் அடைக்கப்படுவார்.
சாட்சியம் வழங்கிய மாணவர்களின் குற்றச்சாட்டை அந்த ஆசிரியை முதலில் மறுத்த போதும் மாணவர்கள் ஆசிரியையின் வீட்டின் அமைப்பு எவ்வாறு உள்ளது என்றும் ஆசிரியையின் விசேட உடல் அம்சங்கள் மற்றும் ஆசிரியை பச்சை குத்தியிருந்த அடையாளங்களை கூறியுள்ளனர்.
அனைத்து குற்றங்களும் நிரூபிக்கப்பட்ட நிலையில் எழுத்தறிவித்த ஆசிரியை தற்போது சிறையில் உள்ளார்.
கடந்த இரண்டு மாத இடைவெளியில் மாணவர்களுடன் பாலியல் உறவு வைத்திருந்தார்கள் எனும் குற்றச்சாட்டில் அமெரிக்காவின் அலபாமாவைச் சேர்ந்த ஆசிரியைகள் சிலர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த ஆசிரியைகளில் சிலர் 15 வயது மாணவனுக்கு பாலியல் வார்த்தைகளை கொண்ட குறும் செய்தி அனுப்பியுள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில அலபாமாவைச் சேர்ந்த பெற்றோர்கள் சிலர் இவ்வாறு வெளியான செய்திக்கு அதிருப்தி வெளியிட்டுள்ளனர். இந்த புள்ளி விபரம் நாடு தழுவிய ரீதியில் அலபாமாவுக்கு அவமரியாதையையும் ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் சில மாநிலங்களில் உள்ள சட்டப்படி ஆசிரியைகள் மாணவர்களுடன் பாலியல் நடத்தையில் ஈடுபடுவது குற்றமாகும். மாணவர்கள் எந்த வயதினராகவும் இருக்கலாம். மேலும் சில மாநிலங்களில் 16 வயதுக்கு அதிகமான மாணவர்களுடன் பாலியல் உறவு வைத்திருப்பது குற்றமல்ல என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் சட்டம் தளர்வாக உள்ள மாநிலத்தில் இவ்வாறான பாலியல் குற்றங்கள் அதிகரித்து செல்லுகின்றன.
அவ்வாறு.....
1வது ஆசிரியை மற்றும் 2 வது ஆசிரியை : மாணவர்களுடன் பாலியல உறவு வைத்திருந்த குற்றத்திற்கு சிறைத்தண்டணை கிடைத்தது.
3வது ஆசிரியை : இரண்டு மாணவர்களுடன் பாலியல் உறவு வைத்திருந்தார்.
4வத ஆசிரியயை : தனது மாணவன் அல்லாத 14 வயது மாணவனுடன் பாலியல் உறவு வைத்திருந்தார்.
5வது ஆசிரியை : 15 வயது மாணவன் ஒருவனுடன் பாலியல் உறவு வைத்திருந்தார்.
6 வது ஆசிரியை : இவர் திருமணமானவர் : மாணவன் ஒருவனுக்கு தனது நிர்வாணப்படத்தை அனுப்பினார். பின்னர் 6 மாத சிறைவாசம் அனுபவித்தார்.
7 வது ஆசிரியை : திருமணமானவர். ஒரு குழந்தைக்கு தாய். வேவ்வேறு 3 மாணவர்களுடன் பாலியல் உறவு வைத்திருந்த காரணத்தினால் கைது செய்யப்பட்டார்.
8 வது ஆசிரியை : மாணவன் ஒருவனை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய காரணத்தினால் கைது செய்யப்பட்டார்.
டெக்சாஸ் மாநிலத்தில் மட்டும் 781 பாலியல் குற்றப்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மாணவர்களுக்கு வழி காட்டும் ஆசிரியைகள் தங்கள் பாலியல் வேட்கைகளை தணித்துக்கொள்ள எதிர்கால செல்வங்களை பாவிப்பது பிள்ளைகளின் வாழ்க்கையை தொலைக்கும் என்றும் பெற்றோர் எண்ணுகின்றனர்.
No comments