Happiness | தனிமையும் இருளும் கிடைத்தால் தூக்கம் உங்களை சும்மா விட்டுவிடுமா என்ன ?
இருளும், தனிமையும் நேர சுழற்சி தெரியாமல் நாட்கணக்கில் நாம் தூங்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஜோஸி லூரெஸ் மற்றும் ஆண்டனி சென்னி ஆகிய இருவரும், கடந்த 1965-ம் ஆண்டு தனிமையில் மனித உடலின் மாற்றங்களை அறியும் ஆய்வுக்காக குகைக்குள் தனித்தனியாக தங்க வைக்கப்பட்டனர்.
பிரெஞ்ச் ஆல்ப்ஸ் பகுதியில் உள்ள குகையில் தங்க வைக்கப்பட்ட இவர்களில் ஜோஸி லூரெஸ் எண்பத்து எட்டு நாட்களுக்கும், ஆண்டனி சென்னி நூற்று இருபத்து ஆறு நாட்களுக்கும் குகைக்குள் தங்கியிருந்தனர்.
இந்த ஆய்வில் முப்பது மணிநேரம் தொடர்ந்து தூங்கினாலும், வெறும் குட்டித்தூக்கம் மட்டுமே போட்டதாக சென்னி தனக்கு தோன்றியதாக குறிப்பிட்டிருந்தார்.
மேற்கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் தனிமையும், இருளும் கிடைத்தால் தொடர்ந்து நாற்பத்தெட்டு மணிநேரம்கூட மனிதர்களை உறங்க வைக்க முடியும் என கண்டறியப்பட்டது. ஜோஸி மற்றும் ஆண்டனி ஆகியோரே வரலாற்றில் முதன்முறையாக அதிகபட்சமாக தனிமையில் இருந்த பெண் மற்றும் ஆண் ஆவர்.
இந்த ஆய்வு முடிவுகள் சமீபத்தில் ஆங்கில இதழ் ஒன்றில் வெளியானது.
No comments