Healthy Life | நோயின்றி உடல் நலம் மன நலம் சிறக்க
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நோயின்றி உடல் நலம் மன நலம் சிறக்க வாழ்த்துக்கள்.
பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கிணங்க நம்மை வெகுவாக பாதிப்பிற்கு உள்ளாக்கிய 2017ம் ஆண்டு முடிவுறுகிறது. வருடம் மட்டுமல்ல நமது கஷ்டங்கள், தீய நிகழ்வுகள், அனைத்தும் நீங்கி நாம் மன நலம் உடல் நலம் சிறக்க, நிறைவேறாத ஆசைகள் நிறைவுற, குடும்பத்தில் சுப நிகழ்வுகள் ஏற்பட, இறையருள் பெற்று மகிழ்வுடன் வாழ, மங்கள நாளில் பிறக்கும் இந்த புத்தாண்டின் வயது 2018.
இந்த புத்தாண்டில் மருந்தில்லா மருத்துவம் நாம் உடல் நலம் மன நலம் சிறக்க சில குறிப்புகள்
சூரியனை நீ எழுப்பு சூரியன் உன்னை எழுப்பக்கூடாது.
காலையில் பல் துலக்கியவுடன் ஒரு தம்ளர் வெதுவெதுப்பன நீர் அருந்தவும்.
காலை 6-7 மணிக்குள் நடைபயிற்சி அவசியம். காலை சூரிய ஒளியில் வைட்டமின் D அதிகம் கிடைக்கும்.
காலை உணவை தவிர்க்கக் கூடாது.
உண்ணும் போது நீர் அருந்தவேண்டாம்.
தினமும் 3லிட்டர் நீர் அருந்தவும். ( சிறுநீரக கோளாறுகள் இருந்தால் நீர் அளவு குறைக்கவும்)
குளிர்ந்த நீர் அருந்துவதை தவிர்க்கவும்.
அதிக உணவு 3 நேரம் சாப்பிடுவதை விட குறைந்த உணவாக 5-6 நேரம் சாப்பிடலாம்.
உணவில் பழங்கள் காய்கறிகள் அதிகமாகச் சேர்க்கவேண்டும்.
எண்ணையில் வறுத்த பதார்த்தங்களைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் ச்ர்க்கரையை உணவில் சேர்ப்பதைத் தவிர்க்கவும்.
இரவு உறங்குவதற்கு குறைந்தது 2 மணி நேரம் முன்னால் சாப்பிடவும்.
No comments